10954 ஒரு கூர்வாளின் நிழலில் (இலங்கைப் பதிப்பு): நினைவுக் குறிப்புகள்.

தமிழினி ஜெயக்குமரன். கிளிநொச்சி: சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம், இல.168, ஆனந்த நகர், 1வது பதிப்பு, 2015. (மஹரகம: கலர் வேவ் பிரைவேட் லிமிட்டெட், 92B, பமுனுவ வீதி).

268 பக்கம், 8 தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-3921-01-7.

தமிழினி (சிவகாமி) பரந்தனில் பிறந்தவர். 1991 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து அதன் அரசியல்துறையின் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக பதவிஉயர்ந்தவர். 2009 இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அரச படைகளிடம் சரணடைந்து, விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர். புற்றுநோய் காரணமாக ஒக்டோபர் 2015இல் தனது 43ஆவது வயதில் மரணமடைந்தவர். தனது பார்வையில் தான் உள்வாங்கப்பட்ட விடுதலைப்போராட்டம் தோல்வியைத் தழுவியதற்கான காரணங்களை இந்நூலில் முன்வைத்திருக்கிறார். தமிழினியின் மரணத்தின் பின்னர் அவரது பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் வெளிவந்திருந்த சமகாலத்தில் அதன் நம்பகத்தன்மை பற்றிய பலத்த விமர்சனங்களுக்கும் சந்தேகங்களுக்கும் உள்ளானது. பாதைகள் திறந்தன, போருக்குள் பிறந்தேன், ஆயுதப் பயிற்சிபெற்ற அரசியல் போராளி, தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும், ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும், வரலாற்றைத் திருப்பிய வன்னிப் போர்க்களம், கிழக்கு மண்ணின் நினைவுகள், உண்மையற்ற சமாதானம், நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம், சரணடைவும் சிறைச்சாலையும், புனர்வாழ்வு ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மககளிரணித் தலைவியின் தன்வரலாறு (தமிழகப் பதிப்பு).

தமிழினி ஜெயக்குமரன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 2வது பதிப்பு, மே 2016, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016, (சென்னை 600014: மணி ஓப்செட் பிரின்ட்ஸ்).

271 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5244-018-4.

இத்தமிழகப் படைப்பில் மூலநூலின் சில அத்தியாயங்கள் காணப்படவில்லை. தமிழகப் பதிப்பில் கீழ்க்கண்ட பத்து அத்தியாயங்கள் காணப்படுகின்றன. பாதை திறந்தது,  போருக்குள் பிறந்தேன், ஆயுதப் பயிற்சிபெற்ற அரசியல் போராளி, தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும், ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும், கிழக்கு மண்ணின் நினைவுகள், உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும், நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம், சரணடைவும் சிறைச்சாலையும், புனர்வாழ்வு ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Gg Bet pięćdziesięciu Free Spins

Content How To Get W rzeczy samej Deposit Premia? Advantages Of Istotnie Deposit Bonuses: Najkorzystniejsze Kasyna Internetowego, Gdzie Dostępne Będą Darmowe Spiny Przy 2024 Rok!