சி.க.சிற்றம்பலம். யாழ்ப்பாணம்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், அராலி தெற்கு, அராலி, 1வது பதிப்பு, சித்திரை 2015. (மன்னார்: நித்திலம் பதிப்பகம்).
x, 406 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 25×20.5 சமீ.
தமிழ்த் தேசியத்திற்குத் தடம் பதித்தவர் தந்தை செல்வநாயகம். அவரோடு விசுவாசமாக இணைந்து செயற்பட்ட தளபதிகளும் அவர்கள் பின்வந்த போராளிகளும்ஆற்றிய பங்களிப்பினால் இன்று தமிழர் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையைச் சென்றடைந்துள்ளது. அத்துடன் இப்பிரச்சினையை நியாயபூர்வமான வழியில் தீர்த்துவைக்கும் பாரிய பொறுப்பும் சர்வதேசத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப்பயணத்தை விபரிக்கும் இந்நூல் முன்னர் வீரகேசரியில் தொடராக வெளிவந்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58231).