நியமுவா வெளியீடு. பத்தரமுல்லை: நியமுவா வெளியீட்டகம், 464/20, பன்னிப்பிட்டிய வீதி, பெலவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2013. (பன்னிப்பிட்டிய: பிரின்டெல் பிரைவேட் லிமிட்டெட், 21/11, நான்காம் தெரு, அரலிய உயன, தெபானம).
36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-8696-33-0.
பிரித்தானியர்களினால் இலங்கையின் ஆட்சியதிகாரம் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திடம் மாற்றப்பட்டதன் பின்னர் கடந்த வரலாறு முழுவதிலும் இலங்கை மக்களை கஷ்டத்துக்கு உட்படுத்திய பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக இருந்துவருவது தேசியப் பிரச்சினையாகும். ஒரு தடவை மூர்க்கமடைந்தும், மறுதடவை தற்காலிகமாக மறைக்கப்பட்டும் நிரந்தரத் தீர்வின்றி வளர்ந்துவரும் இப்பிரச்சினை பல்வேறு உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், இனவாதம், இனக்கலவரங்கள் என்று இழுத்தடிக்கப்பெற்று இறுதியில் 30 ஆண்டு ஆயுதப் போராட்டமாக வடிவம் கொண்டது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட இவ்வேளையிலாவது இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வொன்றை எட்டவேண்டிய சந்தர்ப்பம் இந்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. அதற்கான தீர்வுக்கான அணுகுமுறை எவ்வாறு அமையலாம் என்ற ஆய்வாளர்களின் கருத்துக்கள் இந்நூலில் முன்மொழிவுகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233681).