10962 வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை: அரசியல் கட்டுரைகள்.

த.ஜெயபாலன். லண்டன் E11 3LG: தேசம் வெளியீட்டகம், 73, Cary Road, Leytonstone, 1வது பதிப்பு, ஜுலை 2016. (சென்னை 600 086: கொம்ப்யுபிரின்ட் பிரிமியர் டிசைன்ஸ் அன்ட் பிரின்ட் ஹவுஸ்).

340 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 10., அளவு: 22×14 சமீ., ISBN: 978-1-911491-00-2.

தம்பிராஜா ஜெயபாலன் 1997 நவம்பரில் தேசம் என்றொரு சமூகவியல்-அரசியல் சஞ்சிகையினைத் தொடங்கி நீண்டகாலம் நடாத்தி வந்தவர். 45 இதழ்களுடன் நூலுருவில் வெளியிடும் முயற்சியை நிறுத்திய பின்னர் ஓகஸ்ட் 2007 முதல் இணைய இதழாக இன்றுவரை தொடர்ந்து இயக்கி வருகின்றார்.  ‘தேசம்நெற் ஆசிரியர்” என்று இன்று ஊடகத்துறையில் பெரிதும் அறியப்பெற்ற இவர் விடுதலைப் போராட்டம் சார்ந்த மாற்றுக் கருத்தாளர்களுக்கு தன் இணையத்தில் விவாதக்களங்களை அமைத்து வருகின்றார். இந்நூல் தேசம் இதழிலும், தேசம்நெற் இணையத்திலும் பிரசுரமான இவரது நாற்பது அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது. இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பெற்றுள்ள இந்நூலின் முதற் பிரிவில் இறுதிப்போர் உச்சத்திலிருந்த (27.11.2008) வேளையிலிருந்து முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்த காலப்பகுதி வரையிலான (17.6.2009) காலகட்டத்தில் எழுதப்பெற்ற 30 அரசியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் மே 18 2009க்குப் பின்னரான 18.2.2010 வரையிலான இலங்கை அரசியல் மற்றும் மக்கள் வாழ்வியல் பற்றிய 10 கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கின்றது.

ஏனைய பதிவுகள்