10966 ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?.

கலையரசன். சென்னை 600024: வடலி வெளியீடு, D 2/5, அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன்கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

72 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21×14 சமீ.

சமகால உலக அரசியலை ஆழமான பார்வையோடு எழுதிச் செல்லும் கலையரசன், ஈழத்தின் முக்கிய ஆளுமை. தற்போது நெதர்லாந்தில் வசிக்கிறார். கலையரசனின் எழுத்துக்கள் பூச்சுக்களற்றவை. உணர்ச்சிக்கு ஆட்படாத தர்க்கத்தை எல்லாப் பக்கங்களிலும் இருந்து முன்வைக்கிறார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா, அகதி வாழ்க்கை ஆகிய இரண்டு நூல்களைத் தொடர்ந்து  இந்நூல் வெளிவந்துள்ளது. இஸ்ரேலும் ஈழமும் பொருந்திப் போகும் மற்றும் விலகிச் செல்லும் புள்ளிகளை வரலாற்று நோக்கில் இந்நூலில் அணுகியுள்ளார். இந்த பேசுபொருளை மைய அச்சாகக் கொண்டு உலக அரசியலையும் ஆழமான நோக்கில் விபரிக்கிறார்.

ஏனைய பதிவுகள்

16337 நோய்கட்கு சித்தப்பரிகாரம்.

திலகேஸ்வரி குமுதரஞ்சன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 166 பக்கம், விலை: