வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்).
140 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள், கல்வெட்டுப் பாடல்கள்-செப்பேடுகள்-ஏனைய சாசனங்கள், மான்மியங்கள்-சமய இலக்கியங்கள், மரபுவழி வழக்காறுகள்-சட்டங்கள், பிற்பட்ட காலத்தே வெளிவந்த நூல்கள்-வெளியீடுகள்-பிற ஆவணங்கள், கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்-ஒரு மீள்பார்வை ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51344).