எம்.ஏ.சமது. மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (மூதூர்: IFAS நிலையம்).
(18), 610 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
கல்வித்துறையில் அதிபராகப் பணியாற்றிய மீராசா அப்துல் சமது (முகைதீன்) சிறந்த தமிழறிஞராவார். கொட்டியாபுரப்பற்று பிரதேசத்தில் தனது 42 வருட கால சேவை அனுபவங்களின் பின்னணியில் உசாத்துணை நூல்கள் பலவற்றின் உதவியுடனும் தான் சார்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் உதவியுடனும் கொட்டியாபுரப்பற்று (மூதூர்) பற்றிய ஏராளமான தகவல்களைத் திரட்டி இப்பிரதேச வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். கொட்டியாபுரப்பற்றின் புவியியற் பின்னணி, நிலப்பயன்பாடு, கொட்டியாபுரப்பற்று கிராமங்களின் தோற்றமும் வளர்ச்சியும், அரசியல் தாக்கங்களும் விளைவுகளும், மூதூர் முஸ்லீம்களின் பூர்வீக வரலாறும் சமய கலாசாரப் பாரம்பரியங்களும், பள்ளிவாசல்களின் தோற்றமும் வளர்ச்சியும், முஸ்லிம்களின் சமய கலாசாரப் பாரம்பரியங்கள், முஸ்லிம்களும் அரபு மொழிக் கல்வியும் குர்ஆன் பாடசாலையும் அரபு மொழியும், மூதூர் கத்தோலிக்கர்களின் வரலாறு, மூதூர் தமிழ் மக்களின் வரலாறு, புரட்டஸ்தாந்து மதமும் மூதூர் மெதடிஸ்த தேவாலயமும், மூதூர் பிரதேச பௌத்தர்களின் வரலாறு, கொட்டியாபுரப்பற்று வேடுவ சமூகத்தின் வரலாறு, கொட்டியாபுரப்பற்று கிராமங்களின் வரலாறு, தோப்பூரும் சூழலும் வரலாறும், சம்பூர் கிராம வரலாறு, கூனித்தீவு, நவரட்ணபுர, சேனையூரும் அயற் கிராமங்களும், பள்ளிக்குடியிருப்பு, கிளிவெட்டி, பட்டித்திடலும் பாலத்தடிச் சேனையும், இருதயபுரம், ஈச்சிலம்பற்று, வெருகல், கொட்டியாபுரப்பற்றின் அரசியல் வளர்ச்சி, மூதூர் முஸ்லிம்களின் அரசியலும் முதலாளித்துவ உறவும், மூதூர் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவும் இன்றைய நிலையும், கொட்டியாபுரப்பற்று கிராமங்களின் தோற்றமும் வளர்ச்சியும் எனப் பல்வேறு விடயங்களை 29 அத்தியாயங்களின்கீழ் ஆசிரியர் விரிவாகப் பதிவாக்கியிருக்கிறார்.