அனற் சர்மிளா அன்ரன் யூட் டொளஸ் (தொகுப்பாசிரியர்). லண்டன்: பழைய மாணவர் சங்கம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி-முல்லைத்தீவு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (முல்லைத்தீவு: அஸ்மி பிரின்டர்ஸ், புதுக்குடியிருப்பு).
xxviii, 180 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், திருமதி அனற் சர்மிளா அன்ரன் யூட் டொளஸ், து.ஜெயராஜா ஆகியோரை எழுத்தாளர் குழுவாகக் கொண்டு தொகுக்கப்பெற்ற இவ்வரலாற்று ஆவணம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் லண்டன்வாழ் பழைய மாணவர் அமைப்பின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பின் பூர்வீக மக்களும் நாகநாடும்- சில தொல்லியல் சான்றுகள், வரலாற்றுக்காலம், காலனித்துவ கால புதுக்குடியிருப்பு (அறிமுகம், அமைவிடம், காலநிலை, போர்த்தக்கேயர் கால அரசியல் பொருளாதாரம், சமயம், ஒல்லாந்தர் கால நிர்வாகம், பொருளாதாரம், சமூகம், சமயம், பிரித்தானியர் காலநிர்வாகம், பொருளாதாரம், நிலப்பயன்பாடு, விவசாயம், மீன்பிடி, கால்நடை, வீதிகள், சமயம், கல்வி, போக்குவரத்து, தபாலும் வரியும், இயற்கை அநர்த்தங்கள், குற்றமும் சட்ட நடவடிக்கைகளும், நோய்களும் மருத்துவ வசதிகளும், வீட்டுவசதி, அளவை முறைகள்), இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான புதுக்குடியிருப்பு (அறிமுகம், புதுக்குடியிருப்பு, அமைவிடம், புவியியல் பின்னணி, காலநிலை, இயற்கைக் காடுகள், நந்திக்கடல், இடப்பெயர் விளக்கம், புதுக்குடியிருப்பின் தோற்றம், அரசியல் மற்றும் நிர்வாகம், கிராமசபையின் தோற்றமும் பணிகளும், இரணைப்பாலை குடியேற்றம், பிரதேச சபையின் உருவாக்கம், தேர்தல்களும் மக்கள் பிரதிநிதித்துவமும், செஞ்சிலுவைச் சங்கத்தின் வருகை, இடப்பெர்வுகளும் புதுக்குடியிருப்பும், பொருட்களின் விலை விபரம், புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்ற விபரம், திம்பிலி குடியேற்றம், பொருளாதாரம், புதுக்குடியிருப்பின் குளங்கள், நெற்பயிர்ச்செய்கை, சேனைப்பயிற்செய்கை, வேட்டையாடல், மீன்பிடி, தென்னை, பனைத்தொழிலகள், சிறுகைத்தொழில்கள், போக்குவரத்து, பேர்க்காலப் பொருளாதாரம், போருக்குப் பின்னரான பொருளாதாரம், சமூகம், வீடு, போரின்பின் புதுக்குடியிருப்பின் வீடுகள், உணவு, நிகழ்வும் சடங்குகளும், கல்வி, ஏனைய பாடசாலைகள், இனிய வாழ்வு இல்லம், கலைகள், காத்தவராயன் கூத்து, இலக்கிய கலை, மொழி வழக்காறுகள், சுதேச மருத்துவம், சமயம், புதுக்குடியிருப்பில் உள்ள கழகங்கள்) ஆகிய நான்கு பிரதான இயல்களின் கீழும் அதன்கீழ் விபரிக்கப்பட்ட குறுந் தலைப்புகளின்கீழும் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.