ச.மாணிக்கவாசகர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை, 108, ½ மன்னிங் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு 12: யுனைடெட் மேர்ச்சன்ஸ் பிரிண்டேர்ஸ் லிமிட்டெட்).
x, 556 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 955-99822-0-6.
வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்.
ச.மாணிக்கவாசகர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை, 108, ½ மன்னிங் பிளேஸ், 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 604 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 32.5×22.5 சமீ.
யாழ் நகர மையப்பகுதியிலிருந்து பத்து மைல் தூரத்தில் அமைந்துள்ள வேலணைத்தீவு, சப்த தீவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பண்ணைத் தாம்போதியின் மூலம் யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்புடன் இணைக்கப்பட்ட வேலணை தொடர்பான வரலாற்று நூல் இது. புகழ்பெற்ற ஆலயங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், சமயப் பெரியார்கள், புலவர்கள், கல்விமான்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியற்றுறைப் பெரியோர்கள், சமூக சேவையாளர்கள், இலக்கியவாதிகள் பற்றிய விரிவான பதிவேடு இது. அரசியல் அறிஞர்களான சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, வே.அ.கந்தையா, க.பொ.இரத்தினம், போன்றோரின் வாழ்வேடுகள் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறப்புக் கட்டுரைகளான சரவணைக்கடல் நீரேரியும் வேலணைச் சிற்றருவியும், தீவுகள் தெற்குப் பிரிவின் அபிவிருத்தியும் பிரச்சினைகளும், வேலணைக் கிராம வரலாறு, வேலணைப் புவியியல் முதலானவை அமைகின்றன.