10983 ஈழத்தில் வளர்ந்த தமிழ்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600088: வசந்தா பதிப்பகம், மனை எண் 9, கதவு எண் 26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600005: மாசறு, திருவல்லிக்கேணி).

304 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5×13 சமீ.

1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரி முன்றலில் நடந்தேறிய சென்னை, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ்விழா,  ஈழத்தமிழறிஞர், தமிழகத்து அறிஞர் பலரின் பங்ளிப்புடன் நடந்து முடிந்தது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்  இலங்கைத் தமிழ் விழா மலர், 1951  என்ற தலைப்புடன் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டது.  மலரின் பிரதம ஆசிரியராக  செ.சின்னத்தம்பி அவர்கள் பணியாற்றினார். சுன்னாகம்;, திருமகள் அழுத்தகம் இம்மலரை அச்சிட்டிருந்தது. இன்று அம்மலர் அருகிவிட்ட நிலையில் அதிலுள்ள கட்டுரைகளைத் தேர்ந்து முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழகத்திலிருந்து மீள்பதிப்புச் செய்துள்ளார். தமிழன்பர்கள் யாவரும் ஒன்று சேருக, தமிழ் விழா வாழ்த்து (பிரம்மஸ்ரீ சி.கணேசையர்), இலங்கை ஆற்றுப்படை (சு.நடேசபிள்ளை), மட்டக்களப்புத் தமிழகம் (வி.சீ.கந்தையா), ஈழநாடும் இந்திய சிற்பமும் (க.நவரத்தினம்), இந்தியா சென்று புகழ் நிறுவிய ஈழத் தமிழர் (வித்துவான் சு.கி.நடராஜன்), இலங்கை அரசியலும் தமிழரும் (ச.அம்பிகைபாகன்), இலங்கை முஸ்லிம்களும் தமிழும் (எஸ்.எம்.கமால்தீன்), தமிழ்த்தூது (அறிஞர் தனிநாயக அடிகள்), தமிழ்ப் பெண்கள் பண்புள்ளம் (பண்டிதை க.இராஜேஸ்வரி அம்மாள்), யாழ்ப்பாணப் பூர்வீக அரசின் வரலாற்றுச் சுருக்கம் (அ.சிற்றம்பலம்), ஈழநாடும் தமிழும் (கா.பொ.இரத்தினம்), கிறிஸ்தவ மிஷனரிமார் தமிழுக்காற்றிய பணி (கே.ஈ.மதியாபரணம்), ஈழத்தின் பிரசித்திபெற்ற இடங்கள் (முதலியார் குல.சபாநாதன்), ஈழநாடும் சைவமும் (மு.ஞானப்பிரகாசம்), இலங்கை நாட்டுப் பாடல்கள் (மு.இராமலிங்கம்), யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் (அ.சரவணமுத்து), நான்காம் தமிழ்விழா நிருவாகசபை-அங்கத்தவர்கள், ஈழத்து முஸ்லீம்களும் தமிழும், ஈழத்து இஸ்லாமிய தமிழ் இலக்கியம், அறிஞர் சித்தி லெவ்வை, இலங்கை முஜ்லிம்களின் தமிழ்ப் படைப்புக்கள்-ஒரு கண்ணோட்டம், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவிகள், ஈழத்து இசுலாமிய இலக்கியம் ஆகிய 24 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 193028).

ஏனைய பதிவுகள்

Book of Ra Für nüsse zum besten geben

Content Perks And Pitfalls Of Paysafecard Sind PaysafeCard Casinos in Deutschland dem recht entsprechend? Neue PaysafeCard Casinos 2024 Häufig gestellte fragen hinter PaysafeCard Kostenlose Novoline