10984 ஈழம்: உலகை உலுக்கிய கடிதங்கள்.

சூரிய தீபன் (இயற்பெயர்: பா.செயப்பிரகாசம்), கண.குறிஞ்சி. தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஜுன் 2009. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).

88 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.

இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்ரமசிங்க, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது உலகின் கவனத்தினைத் திருப்பத் தன்னையே எரித்துக்கொண்ட முத்துக்குமார், உலகப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு என்பன உள்ளிட்ட  13 முக்கியஸ்தர்களினால் எழுதப்பட்ட ஈழப்பிரச்சினை அல்லது  இலங்கையின் மனித உரிமைப்பிரச்சினை தொடர்பான முக்கிய கடிதங்களை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. வால்ட் விட்மன் கவிதை முதலாவதாகவும், அதனைத் தொடர்ந்து, ஒரு பெண் புலியின் உணர்ச்சிக் கடிதம், புலிகளே மக்கள் மக்களே புலிகள், ரூபன் கடிதம், முருகதாசன் கடிதம், ஈழமக்கள் ஒரு புழுவிலும் கேவலமானவரா, தென்னாசியாவின் அதி உயர் கல்விமான்கள் கடிதம்,  மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் கடிதம், உலகப் பத்திரிகையாளர் கூட்டமைப்புக் கடிதம், லசந்த விக்கிரமசிங்கே கடிதம், இன்குலாப் கடிதம், பெரியார் வழியா அண்ணா வழியா, முத்துக்குமார் கடிதம், ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல் ஆகிய தலைப்புகளில் மற்றைய முக்கிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Play Societal Black-jack Game

Content Gambling enterprise Guru Greatest Totally free Black-jack Sim? Alive Agent Black-jack Is there A change Between Solitaire And Klondike? Before making your choice, you