10990 தமிழராய் உணரும்தருணம்.

ரவிக்குமார். சென்னை 600024: ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஆப்செட்).

184 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80244-11-2.

முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் பின்னெழுந்த உணர்வலைகளில் குழம்பிப்போயிருந்த தமிழக வாசகர்களிடம் ஈழப்பிரச்சினை பற்றிய தெளிவானதொரு புரிதலை முன்வைக்கும் வகையில் 33 கட்டுரைகளுடன் இந்நூலை வெளியிட்டுள்ளார். தமிழராய் உணரும் தருணம், பட்டினியும் ஓர் ஆயுதம், ஈழத்துக்கு அங்கீகாரம், அன்டன் பாலசிங்கம், வான்பாய்ச்சல், கச்சதீவை மீட்க கருத்தறியும் வாக்கெடுப்பு, இலங்கைப் பிரச்சினையும் இடதுசாரிகளின் மௌனமும், இலங்கையில் இனச் சுத்திகரிப்பு, நீதிபதி பி.என்.பகவதி குழுவின் தோல்வி, சுப. தமிழ்ச்செல்வன், இலங்கை அரசின் போர்ப் பிரகடனம், கடலுக்குள் கண்ணிவெடி, கறுப்பு ஜுலை-காய்ந்துபோன இரத்தம், கச்சதீவை மீட்கமுடியுமா, சப்பென்று முடிந்த சார்க் மாநாடு, இலங்கைப் போரில் இந்தியப்படை, இலங்கை இராணுவத்தின் இரசாயன ஆயுதம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சினை, என்ன நடக்கிறது இலங்கையில், பிழைக்குமா தமிழினம், தீக்குளிப்பின் அரசியல், அடிமைப்படுகிறதா தமிழினம், இனப்படுகொலையில் இந்தியாவும் குற்றவாளியா, ஈழம் என்ற கருத்தியல், ஹிட்லர் பாணியில் வதைமுகாம்கள், புலிகளின் கமிகஸி தாக்குதல், மாறும் கணக்குகள், ஐ.நா.வின் குரலை எதிரொலிப்போம், ஈழத்தில் நடக்கும் மனித அவலத்தை முன்னிலைப்படுத்த வேண்டும், ஈழம் இந்தியாவின் கடமை என்ன, தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாம்களின் நிலை குறித்த அறிக்கை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தவரான ரவிக்குமார்; ஈழப்போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி 2006 முதல் 2009 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இது அமைகின்றது. போரின் கொடூரம், சர்வதேச போர் சார்ந்த நெறிமுறைகளுக்குப் புறம்பான இலங்கை அரசின் செயல்பாடு, விடுதலைப்புலிகளின் போர் யுக்திகளின் பலமும் பலவீனமும் என்று பல தளங்களில் இக்கட்டுரைகள் விரிகின்றன. சட்டத்துறையில் பட்டம் பெற்ற ரவிக்குமார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறப்பிரிகை, தலித், போதி ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48554).

ஏனைய பதிவுகள்

Fantastic 4 Angeschlossen Slots

Content Spielen Sie book of ra magic online | Schlussbetrachtung zum Fantastic Four Slot Sekundär Die Vornamen Könnten Dich Neugierig machen Eur Startguthaben Jedoch Einzahlung