14564 அமுதப் பிரவாகம்.

அன்பழகி கஜேந்திரா. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xx, 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-06820-3-4. உனக்குள் நீ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகமானவர் அன்பழகி. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. தற்போது மன்னாரில் வாழ்ந்து வருகின்றார். உணர்வுகளின் உதயம், சமூக அலைகள், இதய ஓசை ஆகிய மூன்று பிரிவுகளில் இவரது கவிதைகளை வகுத்துத் தந்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்