14566 ஆதிக் கிழவனின் காதல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-930475- 0-7. மழைக்குப் பிந்தைய குடையில் வீசும் ஈர மணத்தைப் போல இவரது கவிதைகள் வசீகரமாய் மணம் வீசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு விதைக்குள் ஆலமரத்தை ஒளித்து வைக்கும் மொழியின் சூத்திரம் அறிந்தவர் இவர். சிறகுகள் இருந்தும் காலைச் சுற்றி சிந்தும் இரைகளில் கோழிகள் திருப்திப்பட்டுக் கொள்கின்றன. நாரைகளே நம்பிக்கையோடு கண்டங்கள் தாண்டிய உலகைத் தரிசிக்கின்றன. தமிழ் உதயாவும் அப்படி நம்பிக்கையோடு சிறகு விரிப்பவர் தான் – (முருக தீட்சண்யா).

ஏனைய பதிவுகள்