அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: அழ.பகீரதன், தேசிய கலை இலக்கியப் பேரவை, செருக்கற்புலம், சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 98 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8637-32-6. பகீரதனுடைய கவிதைகளில் இழந்துபோன வாழ்வு பற்றிய துயரம் துலக்கமாகத் தெரிகின்றது. அவருடைய கவிதைகள் மக்களிடமிருந்து போரும் பலவாறான அராஜகங்களும் பறித்தவற்றைப் பேசுகின்றன. எனினும் அவருடைய அழுத்தம் நமது விழுமியங்களின் சீரழிவால் நாம் இழந்து வருபவற்றின் மீதாகப் பதிகின்றது. இக்கவிதைத் தொகுதியில் என்னத்தச் சொல்ல?, ஊருக்குப் பொதுவாய், நினைப்பு, கற்றுத்தந்தபடி வாழ்வேன், பெண்ணாய்ப் பிறந்ததன் பேறு, இரை மீட்கலாம், நகரம், மாண்டவர் யாரோ?, ஐந்தாம் வகுப்பில், இவர்க்காய், பூமியைப் புரிந்தோமா?, துக்கிக்காமல் எழு, எண்ணாரோ?, தொண்டரின் பாடல் அல்லது அடிமையின் பாடல், விதைச்சாத்தானே அறுவடை, அரை வயதில் சாவு வரும், தகுமோ, ஒன்றீரோ உலகோரோடு, இப்படியும், எழுந்து வாரீரோ?, என்றோ ஒரு நாள், விரித்த பாடப் புத்தகம், இந்த நாளிலிருந்து, பிள்ளைகளிற்காய், முதியோர் இல்லங்கள், நாளைய வாழ்வு யாரின் கையிலோ?, பேப்பர் அவுட்டாம், மீனவரின் குமுறல், சினிமாவும் சுவரொட்டியும், போதை வஸ்து, ஈழ நாட்டில், நாளைய மனிதர் நன்றாய் வாழ்வர், பூக்கலாம் புதிசாய், விதைத்த விதைப்புக்கள், காட்சிகள்: பழைய நினைவுகள், கற்பனையே கொல்லும், நிலைமை ஆகிய 37 கவிதைகள் இத்தொகுப்பில் தேர்ந்து வழங்கப்பட்டுள்ளன.