8021 தமிழ் ஆவண மாநாடு 2013: மாநாட்டு முன்மொழிவுக் கோவை.

நூலகம் நிறுவனம். கொழும்பு: நூலகம் பவுண்டேஷன், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xi, 109 பக்கம், விலை: கறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

2013ம் ஆண்டு ஏப்ரல் 27-28ம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ் ஆவண மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் முன்மொழிவுக் கோவைகளின் தொகுப்பு. கட்டுரையின் முன்மொழிவுக் குறிப்புகள் ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும், வரலாறு/ தொல்லியல்/ மரபுரிமை, நாட்டாரியல், கலை, சமூகம், தமிழ்மொழியும் இலக்கியமும், நூலகவியல், பண்பாடு ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 28.4.2013 இல்  இடம்பெற்ற நூலகவியல் அரங்கில் நூல்தேட்டம்-ஒரு மதிப்பீட்டு ஆய்வு என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணசாமி, கல்பனா சந்திரசேகர் ஆகிய இரு நூலகர்களும் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்