இ. சிவகுருநாதன். தெகிவளை: கலாசூரி இ.சிவகுருநாதன் ஞாபகார்த்தக் குழு, 16/1, மல்வத்தை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
தினகரன் நாளிதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையாளர் கலாசூரி இ.சிவகுருநாதன் அரை நூற்றாண்டுக்கால பத்திரிகைத்துறை அனுபவம் கொண்டவர். இவர் தனது எம்.ஏ. பட்டத்திற்காக சமர்ப்பித்த ஆய்வுரை இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகை வளர்ச்சி என்ற பெயரில் 1993இல் வெளிவந்தது. இந்நூலின் ஒரு இயலாக அமைந்த தினகரனும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் என்ற பகுதி தனி நூலாக அவரது நினைவுப்பேருரை வைபவத்தின்போது 09.09.2012அன்று வெளியிடப்பட்டது.