8052 நெஞ்சுக்கு நிம்மதி.

பத்மா சோமகாந்தன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

xii, 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98250-1-1.

2002ம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையின்  மங்கையர் கேசரி அனுபந்தத்தில்  மகளிரின் உளவியல் சார்ந்த கேள்வி பதில் பகுதியொன்றினை நடத்தியவேளை பெறப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலும் தேர்ந்தெடுத்து இந்நூலில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன. சிக்கலான பல பிரச்சினைகளுக்கு துணிவாக, பொறுப்புணர்வுடன் சில இடங்களில் கண்டித்தும், ஒரு தாயின் பரிவுடனும், ஆசிரியரின் நிதானத்துடனும் விரிவான பதில்களை ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கியிருக்கிறார். 2002-2005 காலப்பகுதியில் இவை பத்திரிகையில் பிரசுரமானவை.

ஏனைய பதிவுகள்