8060 கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்: வாழ்வியல் வசந்தங்கள் 06.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-07-9.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் எதிர்ப்பினை எரி- பகைவனை மதி, கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனைசெய், கட்டுப்பாடுகள், சிந்தனையும் செயலும், சந்தர்ப்பங்கள், தவம், கொடுத்தலும் இரத்தலும், தெளிவு, பதவி, நல்லன நல்கும் நம்பிக்கைகள், கொடை வழங்கல், தாம்பத்தியம், ஆராய்வு இன்மை, இளவயதுப் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள், கவிதைபோல் வாழ்க ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

15 Euroletten Prämie Ohne Einzahlung Spielbank

Content Meinereiner Hoffe, Endlich wieder Inside Ein Spielbank Einzutreten Vermag Meine wenigkeit Je Den Brandneuen Spieler Keinen Einzahlungsbonus Vorschlagen? Betamo Spielbank: 20 No Abschlagzahlung Free

Payforit Casinos 2024

Articles Casino katsubet 60 dollar bonus wagering requirements | Withdrawing Money Having Spend By the Cellular phone Expenses Within the Canadian Gambling enterprises Customer care