பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).
155 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-06-2.
பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக இக்கட்டுரைகள் அமைகின்றன. திருடுதல், ஞானம், நகைச்சுவை, தற்பெருமை, ரசனை, தனித்துவம், உங்களை விரும்புங்கள், மறதி, மனிதன் தான் உயர்ந்தவனா? சிறார்களின் நலனைப் பாதிக்கும் விடயங்கள்: ஒரு பார்வை, காலப் பெறுமதியைக் கண்டுகொள்க, தெரிதலும் தெளிதலும், அஞ்சேல் அஞ்சேல், முதியோரும் இளையோரும் ஆகிய 14 தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.