சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: பட்டதாரி ஆசிரியர் வாண்மை விருத்தி அமைப்பு, கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).
iii, 104 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21×13.5 சமீ.
ஆசிரியர்களுக்கான உளவளத்துணைசார்ந்த விடயங்களை 24 இயல்களில் ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார். வாழ்வியல் நெருக்கடிகள், முரண்பாடுகளின் நெருக்கிடை, உளவியல் அசைவியக்கங்கள், அறிகைக் கோலங்களின் சமூகத்தளம், உள் மனிதம், விடலைப் பருவத்தினரை விளங்கிக்கொள்ளல், உளநலம் பாதிக்கப்படுதலும் மொழி வெளிப்பாடும், உளச்சார்பைப் புரிந்துகொள்ளல், உள நாட்டத்தை விளங்குதல், அடைவுகளை மதிப்பீடு செய்தல், இலங்கையின் கல்வி முறைமை, தமிழர் பண்பாட்டில் நிலவிய வரைபியல் உபாயம், குழநிலை ஆற்றுப்படுத்தல், மதியுரையும் சீர்மியமும், நேர்காணல், சீர்மிய முறையியல்கள், தொழிற் கோலங்கள், தொழில்சார் ஆற்றுப்படுத்தல், ஆசிரியருக்குரிய குணநலன்கள், சீர்மியம், சீரிமிய உதவும் முறைகள், உளநெறிக் கதைகள், சீர்மிய நிறைவு, இணைப்பு ஆகிய 24 தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23276).