செய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமின் (மூலம்), ஸாலிஹ் அஸ்.ஸாலிஹ் (ஆங்கில மொழிபெயர்ப்பு), எஸ். எம்.மன்சூர் (தமிழாக்கம்). சவூதி அரேபியா: I.P.C.Islam Presentation Committee, P.O.Box 1613, Safat 13017, 1வது பதிப்பு, ஜனவரி 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. அறிமுகம், மாதவிடாய் என்றால் என்ன? மாதவிடாய் ஆரம்ப முடிவு வயது (மாதவிடாய் நீடிக்கும் கால எல்லை, கருத்தரித்த பெண்களின் மாதவிடாய்), மாதவிடாய் மாற்றங்கள், மாதவிடாய் சம்பந்தமான சட்டங்கள் (தொழுகை, அஸ்ஸவ்ம் -நோன்பு நோற்றல், தவாஃப் – கஃபாவை வலம் வருதல், பிரியாவிடை தவாஃபிலிருந்து விதிவிலக்களித்தல், பள்ளிவாயலில் தங்குதல், முறையான உடலுறவு, விவாகரத்து, விவாகரத்தின் இத்தாவும் மாதவிடாயுடனான தொடர்பும், சுதந்திரமான கருப்பை, குஸ்ல் -குளிப்பு கட்டாயமாதல்), இஸ்திஹாதாஹ், நஃபாஸ என்றால் என்ன?, மாதவிடாயைத் தடுத்தல், கருத்தடை, கருச்சிதைவு செய்தல், வினா-விடைகள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44595).