8117 புனிதர்களும் புரட்சிகளும் (லத்தீன் அமெரிக்கா).

ஜெ.இ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 49, 6ம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஆனி 2007. (யாழ்ப்பாணம்: பிலோமினா அச்சகம்).

x, 145 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-955-50109-1-7.

அறிமுகம், லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ உதயம், நீக்கிரோ அடிமைகளும் பண்ணைகளும், அமெரிக்க காலனித்துவ கிறிஸ்தவம் 1808-1870, நாஸ்திகமும் திருச்சபையும், லத்தின் அமெரிக்க சோஷலிசம் 1930-1960, சில நாடுகளின் வரலாறு, இன்றைய லத்தின் அமெரிக்கா ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏழு அத்தியாயங்களும் சுருக்கமாக கொலம்பஸ் ஸ்பானிய குவாடலுப்பே தாயின் பாதார விந்தத்தைப் பணிந்து வேண்டித் தொடங்கிய வரலாற்றுக் கடற் பிரயாணம் அவன் வந்தடைந்த புதிய கண்டத்தின் வரலாற்றை மாற்றிய கதையைக் கூறுகின்றன. இது மெக்சிக்கோவின் சான்டொன் யுவானுடன்  சுவையாக ஆரம்பித்து, வண. பிதா புறோவின் வீர இரத்த மரணத்தில் முடிகின்றது. கலாநிதி சுவாமி ஜெ.இ.ஜெயசீலன் அடிகளார், யாழ்ப்பாணத்திருச்சபை வரலாறு (1997), ஆசியத் திருச்சபை வரலாறு (2007), இலத்தீன் அமெரிக்க புனிதர்களும் புரட்சிகளும் ஆகிய நூல்களின் ஆசிரியர். தேவதாயின் குரல் என்ற இறையியல் இதழை 1997முதல் வெளியிட்டவர். அவ்விதழில் தொடராக வெளிவந்த லத்தீன் அமெரிக்க கிறிஸ்தவர்களின் சோகம் கலந்த வரலாற்றின் நூலுருவே இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 186618).

ஏனைய பதிவுகள்