மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 72 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-348-8.
ஆசிரியர்கள் யார்? என்று தொடங்கி வாழ்வில் வெற்றி அடைவது எப்படி என்பது வரையிலான 29 இயல்களில் 29 கேள்விகளுக்குப் பதிலிறுப்பதாக இந்நூல் அமைகின்றது. ஆசிரியர்களுக்கு வழிகாட்டி உதவும் வகையிலும், விரிந்த தேடலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்நூல் வினா-விடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆசிரியரின் தொழில்சார் பணிகள் யாவை? ஆசிரியர் எதைக் கற்க வேண்டும்?அவர்களிடம் காணப்படவேண்டிய தனிநபர் தேர்ச்சிகள் யாவை? பாடசாலையில் ஆசிரியர் தன் மதிப்பை எவ்வாறு உயர்த்திக்கொள்வது? தொழில்ரீதியாக எவ்வாறு முன்னேறுவது? அதற்கு உதவும் பத்துக் கட்டளைகள் எவை? இடமாற்றம் தொடர்பாக எவற்றைத் தெரிந்தகொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்நூல் பதில் தருகின்றது. பேராசிரியர் மா.சின்னத்தம்பி பாடசாலை ஆசிரியராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் நீண்டகால அனுபவம் பெற்றவர்.