8290 நற்றமிழ்ப் பெயர்கள் (மகளிர்).

ஒப்புரவன் (இயற்பெயர் எல்.அன்டன்). தமிழ்நாடு: நம் வேர்கள் பதிப்பகம், 3, திருத்தாந்தோணிச் சாலை, உறையூர், திருச்சி 3, 1வது பதிப்பு, 2012. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 324 பக்கம், விலை: இந்திய ரூபா 200.00, அளவு: 21×14 சமீ.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான ஒப்புரவன் (எல். அன்ரன்) தொகுத்து வழங்கியுள்ள 30000 பெண்கள் பெயர்களைக் கொண்ட தொகுப்பு நூல். இந்நூலின் பதிப்பாசிரியராக அரிமாவளவன் இயங்கியுள்ளார். 37000 ஆண்-பெண் பெயர்களையும் அவற்றுக்கான பொருள் விளக்கத்தையும் கொண்டு 1997இல் வெளியிடத் திட்டமிடப்பட்ட இந்நூல் காலம் தாழ்த்தியபோதும், 30000 மகளிர் பெயர்களைத்தாங்கிய (பொருள்விளக்கமற்ற) தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்