14576 இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்.

அசரீரி (இயற்பெயர்: பதீக் அபூபக்கர்). வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955- 53885-1-1. பத்தீக் அபூபக்கர் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். லண்டன் யூ.சீ.எல். பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பயிலும் இவர், 2004இலிருந்து கவிதை மற்றும் ஆக்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்துள்ளார். “காற்றில் மிதந்து வரும் சவர்க்காரக் குமிழிகள் நம் முகத்தில் மோதி உடையும் போது ஏற்படும் சிலிர்ப்புப் போல இவரது கவிதைகள் பரவசமூட்டுகின்றன. பதிவு செய்தல் என்பதையும் தாண்டி இன்மைப் பொருளாக கவிதைகள் மிதக்கத் தொடங்கியிருக்கின்றன. அத்தருணங்களே இங்கு கவிவரிகளாகின்றன. திரை விலகும்போது தரிசனம் கிடைப்பதைப் போல நான், நீ எனும் இருமைகளின் உறவிலும் முரணிலும் இறுகுவதும் வழிவதுமாக இவரது கவிதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன” (பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்