8315 அக்ஷரானந்தம்: மொழிசார் கட்டுரைகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்), ச.பஞ்சாட்சர சர்மா. யாழ்ப்பாணம்: தமிழ்ச்சங்கம், ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர், 1வது பதிப்பு, 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

16 + 92 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாக்ஷர சர்மா அவர்களும், அவரது புதல்வனும் அதே கல்லூரியின் பழைய மாணவருமான பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா அவர்களும் எழுதிய மொழிசார் கட்டுரைகளின் தொகுப்பு இது. இதில் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாக்ஷர சர்மா எழுதிய நாவலர் வழி, தாய்மொழியில் தவறு செய்யலாமா? ஆங்கிலத் தமிழ், தமிழ் மொழியும் ரோமன் லிபியும், மாறும் இலக்கணம், மூலங்களும் மொழிபெயர்ப்புகளும், செல்வியில் ஒரு செல்வி ஆகிய ஏழு கட்டுரைகளும், பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா எழுதிய எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர், மெல்லத் தமிழ் இனிச் சாகும், சொல்ல வந்தது ஒன்று சொல்லி முடித்ததோ வேறொன்று, ஊடகவியலாளரின் ஆயுதம் மொழி, உதட்டிற்கும் உள்ளத்திற்கும் இடையில் இடைவெளி இருக்கலாமா, மழலைகளுக்காகச் செய்யும் மொழிக்கொலை ஆகிய ஏழு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12545 – கன்னித் தமிழ் ஓதை மூன்றாம் புத்தகம்.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: டீ.பு. இம்மானுவேல், தலைமைத் தமிழ்ப் போதனாசிரியர், கொழும்பு வேத்தியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை). (4), 154

10792 மனசுலாவிய வானம்.

ப.ஸ்ரீஸ்கந்தன். சென்னை: வடலி வெளியீடு, 8A, அழகிரி நகர்,  4ஆவது தெரு, லட்சுமிபுரம், வட பழநி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 208 பக்கம், விலை: ரூபா 150., அளவு: