8343 மணிவாசகம் உப பாடபுத்தகம்: பாரதம்.

சம்பந்தன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாதன் பதிப்பகம், 3வது பதிப்பு, 1956, 1வது பதிப்பு, 1949, 2வது பதிப்பு, 1954. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×14 சமீ.

மகா பாரதக்கதையை சிறுவர்க்கேற்ற விதமாகச் சுருக்கி மிக எளிமையாக இந்நூலில் வழங்கியுள்ளனர். மணிவாசகம் உப பாடநூல் வரிசையில் வெளிவந்துள்ள இந்நூல் 23 சின்னஞ்சிறு அத்தியாயங்களில் அரச குமாரர்களின் பிறப்பு, படைக்கலப் பயிற்சி, அர்ச்சுனன் காணிக்கை, அரக்கு மாளிகை எரிந்தது, காட்டில் நடந்த கல்யாணம், இந்திரப்பிரஸ்தத்தில் வாழ்தல், சகுனியின் சூதாட்டம், போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கி சிறுவர்களுக்கு  மகாபாரதத்தின் சாற்றைக் கதையாக வழங்குகின்றது. அவர்களை மேலதிக வாசிப்புக்குத் தூண்டும் வகையில் இந்நூல் அமைகின்றது.                        

ஏனைய பதிவுகள்

10714 தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்.

தெளிவத்தை ஜோசப் (இயற்பெயர்: சந்தனசாமி ஜோசப்). ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix, 185 பக்கம், விலை: ரூபா 400., அளவு: