சோதியா (இயற்பெயர்: சிவதாஸ் சிவபாலசிங்கம்). நோர்வே: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், தாய்நிலம் பதிப்பகம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, மாசி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: 50 குரோணர்கள், அளவு: 18×11.5 சமீ. சோதியாவின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு. இதில் சொல்லாமல் சுருங்கிவிட்ட சூரியன்கள், உன் குருதிச் சுவடுகளில் எம் உறுதித் தடங்கள், எழுக இளைஞனே எழுக, தண்ணீரில் ஓர் தகனம், நினைவில் நனைகிறோம், உயிர் விதைப்பு, மாறா ரணம், யு(பு)த்த தர்மம், முள்ளுத் தடியெடுத்து முதுகு சொறியவோ, வேற்றுருவில் வருவீரோ?, கண்ணீர் கரை உடைக்கும், நலிந்த நாரைக்கு கொளுத்தி ஆசையா?, மூட்டிய தீயில் முடிவானாய், புதிய மொந்தையும் பழைய கள்ளும், வன்னி வாகை சூடும், நிரப்பப்படாத வெளிகள், நெஞ்சுருகிக் கூவு, ஒயாது அலையெழும், அமைதியாய் இருப்பது அடங்கிப் போனதாய் அர்த்தப்படாது, சாய்ந்த பெருமலை, விதையாய் வீழ்ந்து விருட்சமாய் எழுந்தோர், கடல்தாண்டி ஒரு காற்றுவழி தூது, இலையுதிர் காலம், தமிழனாகத்தான் இல்லை மனிதனாகவேனும், தொல்லை தொலைந்த முல்லை ஆகிய தலைப்புகளில் தாயக விடுதலை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நோர்வே அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட்டத்தின் கல்விப் பணி மேலாளரும் கவிஞருமான இவருக்கு நோர்வே மாநகர சபையின் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் விருதும் 2006இல் வழங்கப்பட்டிருந்தது.