க.இரகுபரன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. . (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44 புகையிரத நிலைய வீதி).
xi,(4), 354 பக்கம், வண்ண ஓவியத் தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-8564-202.
தமிழ் இலக்கியமும் சமூகமும்-இன்றும் நாளையும் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் 2012இல் நடந்தேறிய உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டினையொட்டி வெளியிடப்பெற்ற சிறப்புமலர் இதுவாகும். மலர்க் குழுவில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தி.ஞானசேகரன், தம்பு சிவசுப்பிரமணியம், வசந்தி தயாபரன், ப.க.மகாதேவா ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர். ‘பூவலைக் கிண்டி/புதுக்கொடத்தக் கிட்டவெச்சி/ஆரம் விழுந்த கிளி/அள்ளுதுகா நல்லதண்ணி’ என்ற கிழக்கிலங்கை நாட்டார் பாடல் வரிகளிலிருந்து பூவல் என்ற தலைப்பு மலருக்கு இடப்பட்டுள்ளது. இம்மலரில் சபா ஜெயராசா, பேராயர் எஸ்.ஜெபநேசன், சோ.பத்மநாதன், றூபி வலன்ரீனா பிரான்சிஸ், ஆர்.சுப்ரமணி, மீரா வில்லவராயர், த.துரைசிங்கம், க.சண்முகலிங்கம், றமீஸ் அப்துல்லா, நவம் வெள்ளைச்சாமி, சி.மௌனகுரு, சி.ஜெயசங்கர், யோ.யோண்சன் ராஜ்குமார், ஜெயரஞ்சினி ஞானதாஸ், எஸ்.ஏ.சி.பெறோசியா, தம்பு சிவசுப்பிரமணியம், எஸ்.எதிர்மன்னசிங்கம், ஆ.தர்மராஜன், மு.அருணாச்சலம், எம்.எஸ்.எம்.அனஸ், எஸ்.வை.ஸ்ரீதர், கோ.குகன், தேவகுமாரி சுந்தரராஜன், எஸ்.முத்துமீரான், அ.முத்துலிங்கம், செ.யோகராசா, சாரல்நாடன், அந்தனி ஜீவா, தி.ஞானசேகரன், ரதிராணி யோகேந்திரராஜா, என்.செல்வராஜா, துணவியூர் கேசவன், க.வெள்ளைச்சாமி, ஸாதியா பௌசர், நதிரா ம., அருட்சகோதரி ஜெசின் பிரான்சிஸ், ஸ்ரீ பிரசாந்தன், மேமன்கவி, அருட்திரு தமிழ்நேசன் அடிகள், எஸ்.எம்.எம்.பஷீர், சோ.பத்மநாதன், சோலைக்கிளி, கல்வயல் வே.குமாரசாமி, வேலணையூர் தாஸ், எப்.சமீரா ஸவாஹிர், ப.க.மகாதேவா, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோரின் 47 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.