கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-955-0367-16-0.
இவ்வரங்கு சிறாரின் விளையாட்டு, வினோதம் மகிழ்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தக்கூடியதான நகைச்சுவைக் கதையைக் கொண்டது. நிலாவன் என்ற முயலின் சாதுர்யமும் குடியானவனின் மேளத்தை துளைத்துப் பார்க்க முனையும் நரியின் விவேகமற்ற செயலும் அதனால் ஏற்பட்ட விளைவுமே கதையாகும். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த முத்து இராதாகிருஷ்ணன் வட மாகாண கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர். சேமமடு பதிப்பகத்தின் பத்மம் சிறார் இலக்கிய நூல் வரிசையில் 17ஆவது நூலாக வெளிவந்துள்ளது.