8426 பூதம் காத்த புதையல்.

முத்து இராதாகிருஷ்ணன். கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-0367-18-4.

இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த முத்து இராதாகிருஷ்ணன் வட மாகாண கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர். சிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கேற்புடன் முகிழ்த்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு, ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நாடக நூலை இவர்  படைத்துள்ளார். வானளாவ உயர்ந்த கட்டிடங்கள் சூழ்ந்த நகரச் சூழலில் வாழும் ஒரு சிறுவன் இயற்கையான சுற்றுச் சூழல் பற்றிய உணர்வினைப் பெறும்வகையில் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. கோபாலன் இன்றைய சிறுவனாகவும், பூதம் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடாகவும், மாசற்ற இயற்கையின் வடிவம் பாடல்கள் இசை என்பனவாகவும் உருவகிக்கப்படலாம். சேமமடு பதிப்பகத்தின் பத்மம் சிறார் இலக்கிய நூல் வரிசையில் 19ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Free Spins

Content Party Casino | roxy palace casino bonus code What Is A 10 Deposit Casino? 5 Free No Deposit Casino But the flexibility over how