த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி, யாழ்ப்பாணம்).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.50, அளவு: 18×12 சமீ.
முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை இளஞ் சிறுவர்களுக்கு உரிய காவியமாகப் பாடியிருக்கிறார் நூலாசிரியர். மண்ணக மாந்தர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு மன்னர்களுக்கு அறபோதனை செய்த நூல் சிலப்பதிகாரம். ஆடற்கலை அரசி மாதவியின் பாத்திரமும் சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒன்று. ஆசிரியர் அவளது கதையை இங்கு சிறுவர் காப்பியமாகப் படைத்திருக்கிறார். இது பாலர் நூல் வரிசையில் 12ஆவது நூலாக வெளிவந்துள்ளது.