என்.நாகூர் உம்மா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37ஃ7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
viii, 44 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-02-4.
ஜனாபா என்.நாகூர் உம்மா திருக்கோணமலை மாவட்டத்தின் புடவைக்கட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர். தமிழ்ச் சிறார்களின் மனதைக் கவரும்விதத்தில் இவரால் எழுதப்பெற்ற ஒன்பது கதைகளை உள்ளடக்கி இந்நூல் வெளிவந்துள்ளது. இராணி எறும்பின் சாதனை, ஒரு முறை செத்துப்பார், காகமும் நரியும், வேட்டை நாய்களை விரட்டிய மான் கூட்டம், நரியை வென்ற முயல், நல்ல நட்பு நன்மையைத் தரும், வஞ்சகத் தவளை, முரட்டு ஆட்டுக்குட்டிகள், நாய்க் குட்டிகளும் பூனைக்குட்டியும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.