ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
v, 36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-2-8.
யானையும் எறும்பும், எலியின் சாதனை, நரியும் காட்டுக்கோழியும், ஆமையும் கொக்கும், தாமரைக்குளம் ஆகிய ஐந்து சிறுவர் கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் சிறுவர் நூல். படைப்பாளி ச.அருளானந்தம், கேணிப்பித்தன் என்ற பெயரிலும் அறியப்பட்டவர். கல்வித்துறையில் ஆசிரியராக, கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.