8473 அண்ணல் மாநபி பிறந்தனரே?

அ.மு.அப்துல் கஹ்ஹார். கிண்ணியா: கிண்ணியா பல நொக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 1993. (திருக்கோணமலை: விஸ்டம் அச்சகம்).

63 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×14 சமீ.

இறைதூதர் முகம்மது நபியவர்கள் பற்றிய இன்தமிழ்க் கவிதைகள் இவை. திருக்கோணமலை மாவட்டத்தின் சின்னக்கிண்ணியா மூன்றாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் அ.மு.அப்துல் கஹ்ஹார்  19.7.1939இல் பிறந்தவர். 1954ம் ஆண்டிலிருந்து வள்ளல், கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர், என்னும் புனைபெயர்களில் எழுதிவருகிறார். பிரதேச வாரியாகவும், அகில இலங்கை மட்டத்திலும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார். கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்