அன்பழகி கஜேந்திரா. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xxi, 77 பக்கம், விலை: ரூபா 220.,அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-06820-2-7. உனக்குள் நீ என்ற இக்கவிதைத் தொகுப்பின் மூலம் ஈழத்தத் தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகமாகின்றார் அன்பழகி. உள்ளத்தில் எழுந்த எண்ணங்களுக்கு கருக்கொடுத்து முகநூல்வழியாக வண்ணக் கவிதைகளை வடித்துவரும் இவர் கவிதைக் குழுமங்களில் இணைந்து அவர்களால் நடாத்தப்பெறும் போட்டிகளின் வாயிலாக இருநூறுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் கிராமிய நாயகி விருது, இளங்கவி விருது, கவிச்சரம் விருது, கவிச்சாகரம் விருது என்பவற்றையும் அண்மைக்காலத்தில் பெற்றுக்கொண்டவர். தனது கவிதைகளில் தேர்ந்த சிலவற்றைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளார். யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மன்னாரை வாழ்விடமாகக் கொண்டவர்.