கலையழகி வரதராணி. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xii, 84 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.
கலையழகி வரதராணி ஹெமரன்ஸியா, கொழும்பு கொட்டாஞ்சேனை (கொட்டஹென) நல்லாயன் மகளிர் கல்லூரி, கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி. 1985இல் சிந்தாமணி பத்திரிகையில் மணிக்கவிதைகள் எழுதித் தன் இலக்கியப் பிரவேசத்தை மேற்கொண்டவர். பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகத்தின் தூண்டுதலால் சிறுகதை, நாவல் என இவரது படைப்புக்கள் விரிந்தன. இந்நூலில் இவரது தேர்ந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது இவரது முதலாவது நூலாகும்.