வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (பதிப்பாசிரியர்கள்). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், V.Sivarajah, Am Windhoevel – 18a, 47249, Duisburg, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).
152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழர்களில் கவித்துவம் மிக்க எழுத்தார்வம் கொண்ட பதினெட்டுக் கவிஞர்களின் எழுபத்தியொரு கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் நூலாக்கக் குழுவினரான வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் ஆகியோருடன், இராஜேஸ்வரி சிவராஜா, சிவதர்சினி, இ.சிறிஸ்கந்தராஜா, கீதா பரமானந்தன், கலைவாணி ஏகானந்தராஜா, பத்மாசினி மாணிக்கரட்ணம், புனிதமலர் இராஜேஸ்வரன், அன்ரனி வரதராசன், மலைமகள், மீனா சிவலிங்கம், பொ.புத்திசிகாமணி, ப.பசுபதிராஜா, வசந்தா ஜெகதீசன், ஜெயா நடேசன் ஆகியோர் இணைந்து கவிதைகளை வழங்கியுள்ளனர்.