8554 விழுங்கப்பட்ட விதைகள்: கவிதைகள்.

தி.திருக்குமரன்.  திருச்சி 1: உயிர் எழுத்துப் பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஆப்செட்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81099-34-6.

காலம் தன்மீது பலவந்தமாகத் திணித்த வாழ்க்கை அனுபவங்களே தன்னுடைய கவிதை என்று ஆரம்பிக்கும் இக்கவிஞர், தன்னுடைய நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொண்ட பிரிவை, காதலை, காலத்தை, மனிதர்களை, போராட்டத்தை, தன்னை உலுக்குகின்ற மொழியில் எழுதியிருக்கிறார். இத்தொகுதியிலுள்ள மொத்தம் 68 கவிதைகளும் விடுதலைப் போராட்டத்தினூடாக வளர்ந்த ஈழத்து இளைஞன் ஒருவனின் உணர்வுகளை வலிமையாகப் பதிவுசெய்கின்றன. இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். முன்னைய கவிதைத் தொகுதி திருக்குமரன் கவிதைகள் என்ற தலைப்பில்  பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் விரிவான அணிந்துரையுடன் 2004இல் வெளிவந்திருந்தது. தி.திருக்குமரன் முன்னதாக சேதுக் கால்வாய்த் திட்டம்: அரசியல் பொருளாதார இராணுவ சூழலியல் நோக்கு என்ற நூலை கே.ரி.கணேசலிங்கம் அவர்களுடன் இணைந்து 2006இல் எழுதி வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்