உஷானி ஜெயானந்தகுமார். யாழ்ப்பாணம்: உஷானி ஜெயானந்தகுமார், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).
xii, 106 பக்கம், படங்கள், விலை: ரூபா 100., அளவு: 18.5×13 சமீ. ISBN: 978-955-53348-0-8.
இலட்சியமயமான உலகம், எதிர்காலம் பற்றிய இனிமையான எதிர்பார்ப்புகள், காணும் காட்சிகளில் எல்லாம் மயக்கும் வசீகரம், பெரும்பாலும் மனிதர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருப்பார்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக வலம்வருவார்கள், முதிரா இளம்பருவத்துக் காதல் உணர்வுகள் இவ்வாறே உஷானியின் கதைகள் விரிவுகொள்கின்றன. பதின்ம வயதுப்பிள்ளையொன்றின் நிர்மலமான மதிழ்வுகளும் நெகிழ்வுகளும் இவளது கதைகளினூடாக வெளிப்படுகின்றன. கோகுலன், அவள் அனாதை அல்ல, முடிவில் ஓர் ஆரம்பம், தாயும் தாய்நாடும் வேறல்ல, ஒளி பிறக்கும், பெண், அருஞ்சொத்து, குறிக்கோள், மகற்காற்றும்…, கைம்மாறு, பட்டுத்தெளிந்தவள் ஆகிய தலைப்புகளில் விரியும் 11 கதைகளிலும் இதை நாம் அவதானிக்கலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 224337).