வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 132 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.,ISDN 978-955-0697-03-8. இறுதித் தூதர் என்று உலக முஸ்லிம்கள் அனைவராலும் நம்பப்படும் முஹம்மத் (ஸல்) தொடர்பாக இந்நூல் எழுதப்பட்டள்ளது. நபிகளின் ஆளுமை, அவரது அரசியல், நபிகளாரின் சிந்தனைகள் என மூன்று பிரிவுகளாக வகுத்து இந்நூல் நபிகளின் வாழ்வை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றது. ‘ஆளுமை” என்ற பிரிவில் நபிகளின் சுயவிபரக் கோவை, அழகை ஆராதிக்கும் இறைதூதர், புன்னகைக்கும் நபிகள், நபிகளும் காமமும், நபிகளின் ஆளுமை ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வை விரித்துச் செல்லும் ஆசிரியர் ‘அரசியல்” என்ற பிரிவில் இஸ்லாத்துக்கு முந்திய அரேபியா, சீறாவில் பெயரிடல்களின் உபாயம், நபிகளும் மனித உரிமையும், நபிகளும் விளிம்புநிலை மக்களும், நபிகளும் குடிமக்களும், நெருக்கடிகளை கையாள்வதில் நபிகளின் தொடர்பாடல், என்பவற்றைப் பற்றி விபரிக்கிறார். ‘சிந்தனை” என்ற இறுதிப் பிரிவில் நபிகளும் தியானமும், நபிகளின் சமூக மாற்றம், நபிகளும் கல்வியும், நபிகள்-தொழில்நுட்பம்- நுகர்வியம், நபிகளின் மருத்துவம் ஆகியவற்றை விளக்கிச் செல்கின்றார். சோனகம்- உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என்று முன்னர் அறியப்பட்ட பதிப்பகமாகும்.