கே.வி.குணசேகரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600005: M.K.Enterprises).
xvi, 280 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 17.5×12 சமீ.
ஆசிரியர், கல்வியாளர், என்ற ஆளுமைக்கு அப்பால் படைப்பிலக்கியத்துறையிலும் தன் தடம்பதித்துவரும் நூலாசிரியர் கந்தர் வைத்திலிங்கம் குணசேகரம் நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். தமிழர்களின் வாழ்வியல் நூலாகிய திருக்குறளில் உள்ள 1330 குறள் பாக்களுக்கும் பொருத்தமான விளக்கமளிக்கும் வகையில் சிறுகதைகளை எழுதவேண்டும் என்ற முனைப்பில் உருவான இறுதித் தொகுதி இதுவாகும்.