செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008.(சென்னை : சிவம்ஸ்)
176 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.
இந்நாவலில் இரண்டு கோட்பாடுகள் முதன்மை பெறுவதைக் காணலாம். ஆண் பாதி-பெண்பாதி என்ற மரபுக்கூற்றை அறிவோம். உளவியல் விஞ்ஞானி சிக்மன் பிராய்டு, ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் உளவியல்ரீதியாக நினைவிலி மனதில் பதிந்துள்ளன என்பார். ஆனால் நடைமுறையில் ஆண்கள் தமது ஈகோ – நான் ஆண் என்ற ஆணவத்தில் பெண்மையைப் பயன்படுத்துவதில்லை. அதே வேளை பெண்ணினம் தக்க வேளைகளில் தம் நினைவிலி மனதில் பதிந்துள்ள ஆண்மையைப் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். குறிப்பாகக் குடும்பத்தில் முரண்பாடுகள் ஏற்படும்போது, பெண்கள் வன்முறையாகப் பாதிக்கப்படும் வேளைகளிலும் தமது ஆண்மையை எதிர்த்துச் சண்டையிடுவதன்மூலம் வெளிப்படுத்துவர். இரண்டாவது கோட்பாடு, உலக வரலாற்றில் தொடர்ந்த யுத்தங்களில் “எம்பயர்” வல்லரசாக சிலகாலம் எழுச்சிபெறலாம். அந்த வெற்றி நீடிப்பதில்லை. வீழ்ச்சி தொடரும். பின்னர் அவை மீண்டு எழுவதில்லை. உரோமாபுரி சாம்ராச்சியம், ஒட்டோமன் வல்லரசு, பிரிட்டிஷ் சாம்ராச்சியம் என்பன உதாரணம். அத்தோடு அண்மைக்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் காணலாம் போர்களில் ஈட்டும் வெற்றிகள், எழுச்சி தருவதில்லை, வீழ்ச்சியே தொடரும். இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் இந்நாவல் எழுதபபட்டுள்ளது.