8778 ஆடும் குதிரை: உலகச் செவ்விலக்கியச் சிறுகதைகள்.

என்.கே.மகாலிங்கம். சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், எண்: 123V/243V, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 005: கணபதி புரோசஸ்).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்து எழுத்தாளரான என்.கே.மகாலிங்கம் தற்போது கனடாவில் வசிக்கின்றார். சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை தமிழுக்குக் கொண்டுவந்தவர் இவர். இத்தொகுப்பில் உலகக் கவனயீர்ப்பைப்பெற்ற ஏழு சிறுகதைகளை இவர் வழங்கியுள்ளார். இறுதிக் கண்டம் (ஜும்பா லாஹிரி), நடன மாதர் (மார்கரெட் அட்வுட்), ஆடும் குதிரை (டி.எச்.லாரன்ஸ்), அவர்கள் சுமந்து சென்ற பொருட்கள் (டிம் ஓ பிரையன்), கேவலமான ஒரு மனிதக் கனவு (தஸ்தாயெவ்ஸ்கி), பாலத்தடியில் ஒரு கிழவர் (எர்னஸ்ட் ஹெமிங்வே), சுவர் (ழான் போல் சார்த்தர்) ஆகிய ஏழு கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

15200 இளம்பிறையும் எடைத் தராசும்: இலங்கை-அரேபிய தொடர்புகள் பற்றிய ஆய்வு.

ரோஹித்த தசநாயக்க (சிங்கள மூலம்), ஹாஸிம் பாத்திமா பிர்தௌஸியா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,