8796 நம் முன்னோரளித்த அருஞ்செல்வம்: இரண்டாம் பாகம்: இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும் 1500-1796.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன் (மூலம்), நவாலியூர் சோ.நடராஜன் (தமிழாக்கம்).  கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: அப்பொத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட்).

xv, 259 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 18×12.5 சமீ.

இலங்கைப் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு ஏற்றதாய் வித்தியாபகுதியினரின் பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட நூல். புது நாடுகளைக் கண்டுபிடித்தலின்பொருட்டுச் செய்த பிரயாணங்கள், கல்வியின் மறுமலர்ச்சியும் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தமும், பிரான்சும் ஸ்பானியாவும், பதினெழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலைமை, இங்கிலாந்து 1485-1714, கீழ்நாடுகளில் போர்த்துக்கீசர், போர்த்துக்கீசர் வருகையும் கத்தோலிக்க சமயமும், சீதவாக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும், போரத்துக்கீசர் கண்டியைப் பிடிக்க முயலுதல், கீழ்நாடுகளில் டச்சுக்காரர், இலங்கையில் போர்த்துக்கீசருக்கும் டச்சுக்காரருக்கும் இடையில் சண்டை, பிரித்தானியரும் பிரெஞ்சுக்காரரும் தமது இராச்சியங்களைப் பெருக்கிய வரலாறு, 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி, மத்திய ஐரோப்பாவும் கிழக்கு ஐரோப்பாவும், 1714ம் ஆண்டு தொடக்கம் 1795 வரை பிரித்தானியாவின் நிலைமை, சாத்திர அறிவிலும் எண்ணப்பாங்கிலும் ஏற்பட்ட மாற்றமும்  பிரெஞ்சு அரசியல் புரட்சியும், கண்டி நாட்டரசரும் ஒல்லாந்த தேசாதிபதிகளும், நாயக்கர் அரசர்களுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் ஏற்பட்ட விரோதம், இலங்கையில் போர்த்துக்கீச ஒல்லாந்த ஆட்சி ஆகிய 19 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  24397).

ஏனைய பதிவுகள்

Merkur24

Content Slot wild games: Real Money Slots Tipps Und Tricks Für Spielautomaten Wie Aktiviere Ich Meinen Slot Casino Bonus? Statt Walzenschema mit Gewinnlinien entstehen Gewinne,