8836 அண்ணா ஒரு நோக்கு. கரிகாலன்.

கொழும்பு 13: இரஞ்சனா பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1969.(கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு).

(7), 136 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சர் அறிஞர் சி.என்.அண்ணாதுரையின் (காஞ்சிவரம் நடராசன்  அண்ணாதுரை 15.9.1909-3.2.1969) மறைவையொட்டி தினகரன் பத்திரிகையில் கரிகாலனின் கட்டுரைஅண்ணாதுரை என்பதோர் சகாப்தம் என்ற தலைப்பில் வெளிவந்தது. அக்கட்டுரையின் விரிவாக்கமே இந்நூலாகும். அண்ணா-அறிமுகம், அரசியற் பள்ளியில் அண்ணா,  தி.மு.க வில் அண்ணா,  பேச்சாளர் அண்ணா,  எழுத்தாளர் அண்ணா,  கலைத்துறையில் அண்ணா, தமிழ் எழுச்சியில் அண்ணா, ஆங்கிலத்தில் அண்ணா,  சிந்தனைச் சிற்பி அண்ணா, சமய நெறியில் அண்ணா, ஒப்புரவாளர் அண்ணா, தென்னாட்டின் குரல் அண்ணா, ஈழத் தமிழர் கண்ட அண்ணா, முதலமைச்சர் அண்ணா, அமரர் அண்ணா ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.  இந்நூல் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி அவர்களினதும் புலவர் கருணாலய பாண்டியனாரினதும் மதிப்புரைகளுடன் கூடியது. லண்டன் பல்கலைக்கழக பீ.ஏ.பட்டதாரியான கரிகாலன்அரசியல் கருத்துகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத்து தனக்கெனத் தனியான வாசகர் கூட்டத்தைக் கொண்டிருந்தவர். இளவயதில் சிறந்த அரசியல் பேச்சாளர். 1961ம் ஆண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு ஆறுமாத காலம் சிறைகண்டு மீண்டவர். ஈழத்து அரசியலிலிருந்து பின்னர் ஒதுங்கி வாழ்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  34841).

ஏனைய பதிவுகள்

Casino Bonus Exklusive Einzahlung Schweiz

Content Mobile Spielbank Bovegas Spielbank Gibt Sera Einen Hohen Umschlag Je Diesseitigen Provision? Spinia Spielsaal: Exclusive 25 Free Spins No Abschlagzahlung Maklercourtage! Sonnennächster planet Gauselmann

8731 தமிழின் பா வடிவங்கள்.

அருணாசலம் சண்முகதாஸ். சென்னை 600 113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், C.I.T. வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 1998. (சென்னை 600 014: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம்,