8837 சாணக்கியன்: வன்னியசிங்கம் 100வது ஆண்டு நினைவு மலர். 

கதிர் பாலசுந்தரம் (மலர் ஆசிரியர்). புத்தூர்: ஆவரங்கால் க.சின்னத்துரை,  தமிழரசி வாசம், வன்னியசிங்கம் வீதி, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 11: A.T.Publishers, 195 Wolfendhal Street).

xvi, 170 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.

கோப்பாய் பிரதேச பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த பாரிஸ்டர் குமாரசாமி வன்னியசிங்கம் (12.10.1911-17.09.1959) தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியையும் சில காலம் அலங்கரித்தவர்.  அவரது நூற்றாண்டு நினைவாக அவரது அரசியல் வரலாற்றைப் பேசும் மலராக இந்நூல் வெளிவந்துள்ளது. முதலாம் பாகத்தில் தமிழரசு நாயகன் அறிமுகம் (கோவையூர்க் குணன்), தமிழரசு வளர்த்த பெருந்தலைவர் (ஆவரங்கால் க.சின்னத்துரை), தந்தை செல்வாவின் வலது கரம் (நக்கீரன்), தீர்க்கதரிசன உர்ஜிதம், சத்திய சோதனை (அ.க.த.கிருஷ்ணராசா), அரசுக்குக் காலக்கெடு விதித்தவர் (திருமலை வீர. சுப்பிரமணியம்), ஒப்பந்தம் சூதாட்டத் துருப்புச் சீட்டு, தூக்கில் தொங்கச் சித்தமாயிருக்கிறேன், மட்டக்களப்பை நேசித்த தலைவர் (செ.இராசதுரை), முன்னைநாள் பயிர்ச்செய்கை உத்தியோகத்தரும் சமாதான நீதவானும் (ஆவூரன் க.திரவியம்), முன்னெச்சரிக்கை (ஐ,தி.சம்பந்தன்), தீண்டாமை ஒழித்த சாணக்கியர், நிஜமாகிய எதிர்வுகூறல் (நக்கீரன்), வன்னியர் என்ற திண்ணியர் (கனக மனோகரன்), ஈழத்துச் சாணக்கியன், வன்னியனார் போராட்டங்கள் விளைவு: ஒரு கண்ணோட்டம் ஆகிய அத்தியாயக் கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் வன்னியசிங்கம் வாழ்க்கைக் குறிப்பு-மகளின் பார்வையில் (ஹேமாவதி பாலசுப்பிரமணியம்), நான் கண்ட வன்னியசிங்கம் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), நவக்கிரியில் தேர்தல் பரபரப்பு (துண்டுப்பிரசுரம்), தியாகமாமலை (சு.சச்சிதானந்தன்), தமிழறிஞர் வழக்கறிஞர் கு.வன்னியசிங்கம் (கி.ஆ.பெ.விஸ்வநாதம்), என் கணவரைப்பற்றிச் சில வார்த்தைகள் (கோமதி வன்னியசிங்கம்), பாராளுமன்றத்தில் இரங்கலுரை ஆகிய தகவல்களும், மூன்றாவது பாகத்தில் 17.4.1954இல் திருக்கோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கு.வன்னியசிங்கத்தின் தலைமைப் பேருரையும் 15 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. (மலராசிரியர் கதிர் பாலசுந்தரம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபராவார்.

ஏனைய பதிவுகள்

Genau so wie Spielt Man Craps?

Content Natürlich Money Craps: Playing With Stakes Die Wettvarianten Gibt Dies Inside Craps Verbunden Craps Strategien, Unser Eltern Kontakt haben Sollten Gebührenfrei Spielbank Spiele Ohne