8838 தமிழர் தலைவர் உயர்திரு அ.அமிர்தலிங்கம் அவர்களின் 51வது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர். 

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: உயர்திரு அ.அமிர்தலிங்கம் அவர்களின் 51வது ஆண்டு நிறைவுவிழா அமைப்புக் குழு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், பிரதான வீதி).

100 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் பணியாற்றியவர் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (26.8.1927-13.7.1989). இவர் யாழ்ப்பாணம், சுழிபுரம் பிரதேசத்தில் பண்ணாகம் கிராமத்தில் பிறந்தவர். சட்டத்துறையில் பயின்று பின்னர் அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டவர். 1977 தேர்தலின் பின்னர் இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இயங்கினார். அத்தகைய உயர் பதவி வகித்த காலகட்டத்தில் 1978இல் இடம்பெற்ற அ.அமிர்தலிங்கத்தின் 51ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட மலர் இது. விழாச் செய்திகளையும், வாழ்த்துரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் உள்ளடக்கியது. இவ்விழாக்குழுவின் காப்பாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான மு.சிவசிதம்பரம், செ.இராசதுரை, வ.ந.நவரத்தினம் ஆகியோர் இயங்கினர். தலைவராக தா.திருநாவுக்கரசுவும், துணைத் தலைவர்களாக இரா.சம்பந்தன், பி.எஸ்.சூசைதாசன் ஆகியோரும் இணைச் செயலாளராக வி.பொன்னம்பலம், எஸ்.கே. மகேந்திரன் ஆகியொரும் பொருளாளராக வெ. யோகேஸ்வரனும் இவ்விழாக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  2989).

ஏனைய பதிவுகள்