எம்.எஸ்.எம்.அனஸ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 46 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-357-0.
இலங்கையின் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 15ஆவது நூலாக 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மறுமலர்ச்சிச் சிந்தனையாளரும் தமிழறிஞருமான முகம்மது காசிம் சித்திலெப்பை (1838-1898) அவர்களின் வாழ்வும் பணிகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மறுமலர்ச்சிச் சிந்தனையாளர், பத்திரிகையியல்: முஸ்லிம் நேசன், அரசியல் போராட்டம், எழுத்துப் பணிகள்: அசன்பெ சரித்திரம், மெய்ஞ்ஞான அறிவும் அஸ்றாறுல்ஆலமும், பன்னூலாசிரியர் ஆகிய ஆறு தலைப்பகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.